தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி.. அஞ்சல் துறையின் முன்னாள் ஊழியர் கைது..!

சென்னை தாம்பரத்தில் தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்கு தாம்பரம் ஜோதி நகரைச் சேர்ந்த ரவி தபால் நிலையத்தில் பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர்.
வேலை தேடும் இளைஞர்களைக் கண்டறிந்து தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி( தாம்பரம்,முடிச்சூர் லட்சுமி நகர் பல்லாவரம் செங்கல்பட்டு சைதாப்பேட்டை,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலரிடம் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை )சுமார் 40 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
பல மாதங்களாகியும் வேலை வாங்கி தராததால் ரவி மீது (பொன்னம்பலம் மற்றும் வெங்கடேசன் உள்ளிட்ட சிலர்) புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர்.
Comments