உயிரே போனாலும் கட்சியின் சட்ட விதியை திருத்த விட மாட்டோம்- ஓபிஎஸ்

அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்று எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதியை மாற்ற நடைபெறும் முயற்சிகளை உயிரே போனாலும் அனுமதிக்க மாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ், துணை முதலமைச்சர் பதவி டம்மி என எனக்கு தெரிந்தும் பிரதமர் மோடி கூறியதால் அந்த பதவியை ஏற்றுக்கொண்டதாக கூறினார்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்தும் ஓபிஎஸ் கடுமையான விமர்சித்தார்.
Comments