3 ரோஸஸ் நிறுவனம் பெயரில் போலி டீ தூள் தயாரித்த 2 பேர் கைது

0 2452

மதுரையில் 3 ரோசஸ் பெயரில் போலியாக டீ தூள் தயாரித்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை அனுப்பானடி பகுதியில், 3 ரோசஸ் நிறுவன டீ தூள் விற்பனை குறைந்தது குறித்து அந்த நிறுவனத்தின் பிரதிநிதி சோமசுந்தரம் ஆய்வு செய்த போது சின்னக் கண்மாய் அருகேயுள்ள சிறிய குடோனில் 3 ரோசஸ் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி, இரசாயன நிறமிகள் சேர்த்து போலியாக டீ தூள் தயாரித்து விற்பனைக்கு அனுப்புவதை கண்டறிந்தார்.

புகாரின் பேரில் விக்னேஷ் குமார், சவுந்தரபாண்டியன் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ எடையுள்ள போலி த்ரீ ரோசஸ் டீ தூள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments