ஜம்முகாஷ்மீரை பிற மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் ரூ.18,539 கோடியில் 6 சுரங்கப்பாதைத் திட்டங்கள்..!

0 1834

ஜம்முகாஷ்மீரை பிற மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் 18 ஆயிரத்து 539 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தி வரும் ஆறு சுரங்கப்பாதைத் திட்டங்களில் 3 திட்டங்கள் 2023ம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவடையும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதில், கெளனி, 'கேஎம் 83' மற்றும் இசட்-மோர்க் ஆகிய 3 சுரங்கப் பாதைகளைத் தொடர்ந்து, ஸ்ரீநகரை கார்கிலுடன் இணைக்கும் 14 புள்ளி 15 கிலோ மீட்டர் நீளமுள்ள ஜோஜிலா சுரங்கப்பாதை 2026ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் தேசிய நெடுஞ்சாலை 244ல் மீதமுள்ள 2 சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கு விரைவில் ஒப்பந்தபுள்ளி கோரப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments