டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடுங்குளிர்.. சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு!

0 1006

டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுங்குளிருடன் அடர் பனிமூட்டம் நிலவி வருகிறது.

பல மாநிலங்களில் பனிமூட்டத்தால் பார்வைத்திறன் 50 மீட்டராக குறைந்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸுக்கு கீழ் பதிவாகியுள்ளன.

லேசான பனிப்பொழிவு ஏற்பட்டு வரும் காஷ்மீரின் ஸ்ரீநகர், குல்மார்க் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 4 டிகிரியாக உள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு பனிமூட்டம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments