ட்விட்டர் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக எலான் மஸ்க் அறிவிப்பு..!

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதிய நபர் கிடைத்த பிறகு தனது பொறுப்பை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அதன் பிறகு சாஃப்ட்வேர் மற்றும் சர்வர்ஸ் குழுக்களை இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து தான் விலக வேண்டுமா என எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில் 57.5 சதவீதம் பேர் பதவி விலக வேண்டும் என்றும், 42.5 சதவீதம் பேர் பதவி விலக வேண்டாம் என்றும் வாக்களித்ததை தொடர்ந்து அவர் இதனை அறிவித்துள்ளார்.
Comments