எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு ரூ.5.35 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல்..!

எத்தியோப்பியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 5 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவரை சோதனையிட்ட சுங்கத்துறையினர் 1,542 கிராம் எடை உள்ள மெத்தகுலோன் மற்றும் 644 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments