சிகிச்சைக்காக தென் கொரியா விரைகிறார் நடிகை சமந்தா..!

0 10159

யசோதா படத்தில் வாடகை தாயாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை சமந்தா, தனக்கு ஏற்பட்டுள்ள மயோசிடிஸ் எனப்படும் தசைவீக்க நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக தென் கொரியா பயணமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நோயில் இருந்து படிப்படியாக குணமடைந்து வருவதாக இணையங்களில் வெளியான தகவல்களை தொடர்ந்து சமந்தாவின் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிகிச்சை முடிந்த பின்னர் அவர் முதலில் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் குஷி படத்தின் படப்பிடிப்பை  நிறைவு செய்வார்  என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments