அரசு பள்ளி ஆசிரியை தரக்குறைவாக பேசியதால் பள்ளி மேலாண்மை குழு தலைவி விபரீத முடிவு..!
சென்னை மாங்காட்டில் அரசுப் பள்ளி மேலாண்மை குழு தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக பெண் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்காடு அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் சௌபாக்கியம் என்பவர், பள்ளி மேலாண்மை குழு தலைவி பியூலாவை தரக்குறைவாக பேசி திட்டியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க கோரி மாங்காடு காவல் நிலையத்திலும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்துவிட்டு, பியூலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பியூலா குறித்து ஆசிரியை சௌபாக்கியம் சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ பதிவிட்டு, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
Comments