இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து ஆய்வுக்கூட்டம்..!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையின் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் மற்றும் தென் கொரியா நாடுகளில் சமீப நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
இதனிடையே, தினசரி கொரோனா பாதிப்பு உறுதியானவர்களின் மாதிரிகளை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
Comments