காமெடி நடிகரின் மாயமான மனைவி வீட்டுக்குள் தூக்கிட்டு சடலமாக தொங்கியதால் பரபரப்பு..!
பிரபல காமெடி நடிகர் ஒருவர் தனது மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்த நிலையில், அவரது வீட்டின் மாடி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடி செய்து பிரபலம் ஆனதால் மம்முட்டி உள்ளிட்ட பல்வேறு நாயகர்களுடன் திரைப்படங்களில் நடித்துள்ளவர் பிரபல காமெடி நடிகர் பந்தளம் உல்லாஸ். இவரது மனைவி ஆஷா . இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள பந்தளம் பகுதியில் அண்மையில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வசித்து வருகின்றார்.
சம்பவத்தன்று காலை படுக்கையில் தன்னுடன் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் உல்லாஸ் புகார் அளித்தார். இதையடுத்து அவரது வீட்டிற்கு விரைந்த போலீசார், வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளாக தேடினர். அதில் மேல் மாடியில் பூட்டப்பட்டது போல கதவுகள் மூடி இருந்த அறையில் ஆஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
புதிதாக குடியேறிய வீடு என்பதால் பல அறைகளை பயன்படுத்தாமல் பூட்டியே வைத்திருந்ததால் தனது மனைவி இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறி உல்லாஸ் கதறி அழுதுள்ளார். இதையடுத்து ஆஷாவின் சடலத்தை மீட்ட போலீசார் பிணகூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று நடிகர் உல்லாஸ் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வருவதால் ,உண்மையிலேயே ஆஷா தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments