வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்திய ஆந்திராவைச் சேர்ந்த 15 பேர் கைது.. ரூ.1 கோடி மதிப்புள்ள 127 செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்திய ஆந்திராவைச் சேர்ந்த 15 பேரை கைது செய்த செம்மர கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் கைப்பற்றினர்.
இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், காட்டில் 3 வெவ்வேறு இடங்களில் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 127 செம்மரக்கட்டைகளை கைப்பற்றியதோடு, கடத்தல்காரர்கள் பயன்படுத்திய 6 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
Comments