சீனாவில் 60 சதவீதம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு - தொற்றுநோயியல் நிபுணர்

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 90 நாட்களில் 60 சதவீத சீன மக்கள், அதாவது உலகளவில் 10 சதவீத மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் தொற்றுநோயியல் நிபுணரான எரிக் ஃபீகல்-டிங் தெரிவித்துள்ளார்.
சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் பெய்ஜிங்கில் உள்ள மயானங்களில் இடைவிடாது சடலங்கள் எரிக்கப்படுவதோடு சுமார் 2 ஆயிரம் சடலங்கள் பிணவறைகளில் குவிந்து கிடப்பதாகவும் வீடியோக்களுடன் அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீனாவில் நிலைமை மிக மோசமாகியுள்ளதாக தெரிவித்துள்ள எரிக், 2020ம் ஆண்டு இருந்த அதே நிலைமைக்கு சீனா மீண்டும் திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Comments