வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக்கோரி ஜாக்குலின் மனு..!

வெளிநாடு செல்ல அனுமதியளிக்கக்கோரி பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனுவிற்கு, அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினிற்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது.
மேலும், சுகேஷ் மீதான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக, ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் நிலையில், வெளிநாடு செல்ல அனுமதிகோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
Comments