மிஷன் இம்பாஸிபிள் 7-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு காட்சி.. மலை முகட்டிலிருந்து பைக்கில் குதித்த டாம் குரூஸ்

0 1172

அடுத்தாண்டு ஜூலை மாதம் வெளியாக உள்ள Mission Impossible திரைப்படத்திற்காக தயாரிக்கப்பட்ட பிரமாண்ட ஸ்டண்ட் காட்சியின் படப்படிப்பு காணொலியை டாம் குரூஸ் வெளியிட்டுள்ளார்.

நார்வே நாட்டிலுள்ள உயரமான மலை முகட்டிலிருந்து பைக்குடன் அவர் கீழே குதிப்பதைப்போல் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் மற்றும் பாராசூட் உதவியுடன் படமாக்கப்பட்ட இக்காட்சிக்காக டாம் குரூஸ், 500 முறைக்கு மேல் ஹெலிகாப்டரிலிருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்தும், மேடு பள்ளமான மோட்டோ கிராஸ் ரேஸ் டிராக்கில் 13 ஆயிரம் முறை பைக்கில் தாவியும், பயிற்சி மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments