நாட்டில் 5 ஜி சேவை வழங்க 20,980 செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன - அமைச்சர் தேவுசிங் சவுகான்

0 1115

நாட்டின் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 5 ஜி சேவை வழங்குவதற்காக, இதுவரை இருபதாயிரத்து 980 செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக, மத்திய தகவல் தொடர்பு இணை-அமைச்சர் தேவுசிங் சவுகான் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில்,  நவம்பர் 26-ஆம் தேதி வரை, 20 ஆயிரத்து 980,  5 ஜி செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்திற்கு சராசரியாக இரண்டாயிரத்து 500 கோபுரங்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக டெல்லியில் ஐந்தாயிரத்து 829 கோபுரங்களும், மகாராஷ்டிராவில் நான்காயிரத்து 51 கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments