புலந்த் ஷாஹரில், மூடுபனி காரணமாக, சுமார் 40 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து..!

0 881

உத்தரபிரதேசத்தின் புலந்த் ஷாஹரில், மூடுபனி காரணமாக, சுமார் 40 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மூடுபனி காரணமாக, ஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலாவின் பாதுகாப்பு வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளானது. அதேபோல் வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 11 ரயில்கள், கடும்பனி காரணமாக தாமதமாக சென்றன.

டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்பட 6 மாநிலங்களில் தொடர்ந்து பனிமூட்டம் அதிகரிக்கும் என, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments