சாலையை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக வந்த கார் மோதிய பதறவைக்கும் சிசிடிவி
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே சாலையை கடக்க திரும்பிய மோட்டார் சைக்கிள் மீது, பின்னால் வந்த கார் வேகமாக மோதிய விபத்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்து காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
நசியனூர் சாமிகவுண்டம்பாளையம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த முத்து என்பவர், கோவில் பூசாரியாக வேலை செய்துவரும் நிலையில், திங்கட்கிழமை காலை கோவில்களில் பூஜை செய்துவிட்டு, தனது தங்கை புஷ்பாவுடன் நசியனூர் திரும்பியுள்ளார்.
கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றபோது, பின்னால் வந்த கார் வேகமாக மோதியதால், தூக்கி வீசப்பட்ட முத்து, புஷ்பா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநரை கைது செய்து வழக்குப்பதிந்து, சித்தோடு போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Comments