பெரு நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தவர்களை சாண்டா கிளாஸ் வேடமணிந்து சென்று போலீசார் நடவடிக்கை..!

பெரு நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தவர்களை சாண்டா கிளாஸ் வேடமணிந்து சென்று போலீசார் கைது செய்தனர்.
லிமாவில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஒரு குடும்பத்தினர் ஈடுபடுவதாக தகவல் வந்ததையடுத்து அங்கு சென்ற போலீசார், வீட்டின் கதவை பெரிய சுத்தியல் கொண்டு உடைத்து உள்ளே நுழைந்தனர்.
வீட்டிற்குள் கொக்கைன் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்த போலீசார், 4 பேரை கைதுசெய்தனர்.
கோகோ இலை மற்றும் கோகோயின் உற்பத்தியில் அண்டை நாடான கொலம்பியாவிற்கு அடுத்த இடத்தில் பெரு உள்ளது.
Comments