இந்தியா- இலங்கையில் போதைப்பொருள், ஆயுத கடத்தல்.. திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் இருந்த 9 பேர் கைது..!

சட்டவிரோதமாக இந்தியா மற்றும் இலங்கையில் போதைப்பொருள் மற்றும் ஆயுதத்தை கடத்தி விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக 9 இலங்கை நாட்டைச் சேர்ந்தவரை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தியா,இலங்கையில் போதை மருந்துக் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவதாக தானாக முன் வந்து பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. கடந்த ஜூலை 20-ஆம் தேதி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை மற்றும் விசாரணை நடத்தியது.
அதனைத் தொடர்ந்து ஒன்பது இலங்கை நாட்டவரை திருச்சி அகதிகள் முகாமிலிருந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
Comments