ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டன - அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

உக்ரைனில் ஈரானை சேர்ந்த 30 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தனது இரவு உரையின்போது ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 ரக காமிகேஸ் ட்ரோன்கள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார்.
ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்ட இந்த ட்ரோன்கள் அதன் இலக்குகளை அடையமுடியவில்லை என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ஈரான் சமீபத்தில் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு முன்பு ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் வழங்கியதை ஒப்புக்கொண்டது.
Comments