இந்தியாவில் மேலும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திய கூகுள்... மருத்துவரின் மருந்துச் சீட்டுகளை டிஜிட்டல் மயமாக்க முயற்சி..!

கூகுள் நிறுவனம் இந்தியாவில் மேலும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற 8-வது கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வில், மருத்துவரின் மருந்துச் சீட்டுகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகள் மற்றும் அதன் தேடல் செயல்பாட்டை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட புதிய வசதிகளை கூகுள் அறிமுகப்படுத்தியது.
மருந்து சீட்டில் உள்ள கடினமாக வார்த்தைகளை இதன் மூலம் எளிதாக படிக்க முடியும் என கூறப்படுகிறது.
Files by Google ஆப் மூலம் பயனர்களுக்கு பாதுகாப்பான Digilocker வசதியையும் Google அறிமுகப்படுத்தியுள்ளது. இது தேசிய eGovernment பிரிவுடன் இணைந்து உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments