முதலைகள்- மனிதர்கள் இடையே மோதலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்பு..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதலைகள் - மனிதர்கள் இடையே நடைபெறும் மோதலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வேலக்குடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மனிதன் மற்றும் முதலை மோதல்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவற்றை களைய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சென்னையை சேர்ந்த இம்டியாவின் வனவிலங்கு போர்டல் என்ற பொது நல அமைப்பை சேர்ந்த குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Comments