மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் சேவைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 99 சதவீதம் நிறைவு - ரயில்வே அமைச்சகம்

0 4292
மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் சேவைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 99 சதவீதம் நிறைவு - ரயில்வே அமைச்சகம்

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் சேவைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக, ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் அத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், மும்பை - அகமதாபாத் இடையிலான பயண தூரம், இரண்டரை மணி நேரமாக குறையும் என ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

508 கிலோ மீட்டர் தொலைவிற்கு, மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ள புல்லட் ரயில், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தாத்ரா - நாகர் ஹவேலி வழியாக செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புல்லட் ரயில் திட்டத்திற்கான கட்டுமான பணிகளில் 24 சதவீத முடிந்துள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments