கனடாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு வீடாக புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் - 5 பேர் பரிதாபமாக பலி

0 1467
கனடாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு வீடாக புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் - 5 பேர் பரிதாபமாக பலி

கனடாவின், டொரண்டோ நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஒவ்வொரு வீடாக புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்த போலீசார், அந்த நபரை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். அங்கு, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குடியிருப்புவாசி ஒருவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து போலீசார் ஆராய்ந்துவருகின்றனர்.

கனடாவில், கைத்துப்பாக்கிகள் விற்பனைக்குத்தடை விதிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் நிறைவடைந்தபோதும், அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments