கஞ்சா விற்பனையை வீடியோவால் அம்பலப்படுத்திய பா.ஜ.க பிரமுகருக்கு வெட்டு..! 4 பேரை கைது செய்த போலீஸ்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் 5 வருடமாக போலீசுக்கு மாமூல் கொடுத்து கஞ்சாவிற்கும் கும்பல் குறித்து வீடியோ வெளியிட்ட பா.ஜ.க பிரமுகரை கஞ்சா கும்பல் மடப்பிடித்து கொலை வெறித்தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றத்தை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் துரை தனசேகர். திருக்கழுகுன்றத்தில் யார் ? எந்த பகுதியில் ? எவ்வளவு நாட்களாக கஞ்சா விற்கின்றனர் ? என்ற தகவலை தனது முக நூல் பக்கத்தில் வீடியோ மூலம் துப்புதுலக்கி பதிவிட்டிருந்தார். காலையிலேயே கஞ்சா போதையில் இருந்த ஒருவரை விசாரித்து அவர் தெரிவித்த தகவல்களை அப்படியே வீடியோ வாக பதிவிட்டிருந்தார். அதில் பேசியவர் 5 வருடமாக போலீசாருக்கு மாமூல் கொடுத்து கஞ்சா விற்றுவருவதாக சிலரது பெயர்களை தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ஆத்திரம் அடைந்த கஞ்சா கும்பல் , சம்பவத்தன்று துரை தனசேகரை வழிமறித்து கொலை வெறி தாக்குதல் நடத்தியது. பலத்த காயம் அடைந்த துரை சந்திரசேகருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் துரை தனசேகரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்த போலீசார் அகமது பாஷா, மன்சூர் அலி , சையது அப்துல் ரகுமான்,இப்ராஹிம், உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
Comments