புற்றுநோயால் பிரிந்த மனைவியின் உயிர்.. துக்கம் தாளாமல் மாரடைப்பு ஏற்பட்டு கணவருக்கு நேர்ந்த சோகம்..!

புற்றுநோயால் பிரிந்த மனைவியின் உயிர்.. துக்கம் தாளாமல் மாரடைப்பு ஏற்பட்டு கணவருக்கு நேர்ந்த சோகம்..!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்த துக்கம் தாளாமல், கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
அயனாவரத்தைச் சேர்ந்த அன்னம்மா என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 3 நாட்களுக்கு முன் உயிரிழந்தார்.
இந்த தகவலை அறிந்து மிகுந்த துக்கத்தில் இருந்த அவரது கணவர் ஐசன் ஜார்ஜிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தம்பதியின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Comments