'ஜெட்-ஸ்கி'யிலிருந்து, திடீரென கடலில் தவறிவிழுந்த வீரர் உயிரிழப்பு.. போட்டியின்போது, பக்கவாதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு என தகவல்..!

0 1813
'ஜெட்-ஸ்கி'யிலிருந்து, திடீரென கடலில் தவறிவிழுந்த வீரர் உயிரிழப்பு.. போட்டியின்போது, பக்கவாதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு என தகவல்..!

தாய்லாந்தில், ஜெட்-ஸ்கி பந்தயத்தின்போது கடலில் தவறிவிழுந்த தென் கொரிய நாட்டு வீரர் உயிரிழந்தார்.

40 வயதான சங் வோன் கிம் போட்டியின்போது திடீரென ஜெட் ஸ்கி வாகனத்திலிருந்து கடலில் விழுந்துள்ளார். அவரை மீட்டு சி.பி.ஆர் சிகிச்சை அளித்த மீட்பு குழுவினர், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஜெட் ஸ்கி வாகனங்கள் ஒன்றோடொன்று மோதாத நிலையில், தானாக தண்ணீருக்குள் விழுந்ததால், அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments