வேளாங்கண்ணி அருகே தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்கள்.. திருடர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் ஈடுபட்ட கிராம மக்கள்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தொடர் திருட்டில் ஈடுபடுவோரை கைது செய்யக்கோரியும், பாதுகாப்பு கோரியும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதாபராமபுரம், பூவைத்தேடி, ராமர்மடம் ஆகிய கிராமங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதுபோல தொடர் திருட்டில் ஈடுபடும் திருடர்களை கைது செய்யக்கோரியும், பாதுகாப்பு கோரியும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு நடத்தி, உரிய பாதுகாப்பு வழங்குவதாக உறுதி அளித்தனர்.
Comments