மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்துவதாக கூறி போதை ஊசி, போதை எண்ணெய்யை விற்று வந்த இருவர் கைது..!
விழுப்புரம் அருகே மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்துவதாக கூறி போதை ஊசி மற்றும் போதை எண்ணெய்யை விற்று வந்த இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பூவாத், தனது நண்பர் உமன்பிரசாந்த்துடன் சேர்ந்து விழுப்புரம் அருகே உள்ள மொரட்டாண்டி குப்பத்தில் வீடு ஒன்றை எடுத்து, மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி வந்துள்ளார்.
ரகசிய தகவலின்பேரில் அவர்களது வீட்டில் சோதனை செய்த ஆரோவில் போலீசார் 3 போதை ஊசி, மற்றும் போதை எண்ணெய் ஆகியவை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments