கடம்பத்தூர் அருகே நடுசாலையில் கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்து விபத்து..!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே நடு சாலையில் கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இருளஞ்சேரியைச் சேர்ந்த திவ்யகுமாரன் என்பவர் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதியது.
இதில் திவ்யகுமாரன் உயிரிழந்த நிலையில், லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனால் லாரியை காவல் துறை யினர் பறிமுதல் செய்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
அப்போது தடுப்பு சுவரில் மோதியதில் டீசல் டேங்க் உடைந்து லாரியில் தீப்பிடித்து மளமளவென எரிந்தது.
Comments