சென்னை எழும்பூரில் நவீன உலகம் மறந்து போன மரபை நினைவூட்டும் காரைக்குடி கண்காட்சி..!

சென்னை எழும்பூரில் நடைபெறும் நகரத்தார் மகளிர் மாநாடு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பழங்கால பொருட்களை நினைவூட்டும் வகையிலான கண்காட்சி நடைபெற்றது.
காரைக்குடி சந்தை என்ற பெயரில் நடைபெற்ற இக்கண்காட்சியில், பல்லாங்குழி கட்டை, பித்தளை தூக்குச்சட்டி, செம்பு பாத்திரங்கள் உள்ளிட்டவையும், பெண்களை கவரும் ஆடைகள், பட்டுப் புடவைகள் மற்றும் அணிகலன்களும் இடம்பெற்றிருந்தன.
தேக்கு மரத்தால் ஆன சூட்கேஸ், மடிக்கணினி பைகள், சிறிய ரக அலமாரிகள், மாட்டு வண்டிகள் உள்ளிட்டவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
Comments