வாரியிறைத்த வடிவுக்கரசி.! ஆண் நண்பரை நையப்புடைத்த உறவினர்கள்.!
குடும்ப கஷ்டத்தை போக்க, வெளிநாட்டு வேலைக்குச்சென்ற கணவனை நம்பிக்கை மோசடி செய்த பெண்ணை, நைச்சியமாக ஏமாற்றி வந்த ஆண் நண்பர், அடி-உதைக்கு ஆளாகி, நிர்காதியாய் நின்ற சம்பவம் கரூரில் அரங்கேறியுள்ளது.
தொழில் நகரமான கரூரில், வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியளவில் பரபரப்பு இருக்காது.
ஆனால், திடீரென, கரூர் மேற்கு மட-வளாகம் பகுதியில், ஒருவரை, ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைத்து, தரையில் வீழ்த்தி, தொடர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அடி-உதைக்கு ஆளானவர் சேலத்தைச் சேர்ந்த சசி என்பது தெரியவந்துள்ளது.
திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கரூரில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் பணியாற்று வந்துள்ளார்.
அப்போது, ஈரோடு கொடுமுடியைச் சேர்ந்த வடிவுக்கரசி என்பவர், தமது தந்தையோடு, 2 ஆண்டுகளுக்கு முன்பு, கார் வாங்க வந்தபோது, பழக்கம் ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
வெளிநாட்டில் கஷ்டப்படும் கணவன், 10 வயது மகன் ஆகியோரை மறந்து, சசியுடன் நெருக்கம் பாராட்டிய வடிவுக்கரசி, கஷ்டப்பட்டு உழைத்து கணவன் அனுப்பிய பணத்தை, சசிக்கு வாரியிறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுதவிர, குடும்பத்தினர், மற்றும் உறவினர்களிடம் என 30 லட்ச ரூபாய் வரையில் சசிக்கு கொடுத்த வடிவுக்கரசி, ஒருகட்டத்தில், வீட்டை விட்டு வெளியேறிய, கரூரில் சசியுடன் சேர்ந்து ஷவர்மா கடையும் ஆரம்பித்துள்ளார்.
இதையெல்லாம் தாமதமாக அறிந்த உறவினர்கள், ஈரோட்டில் இருந்து கரூருக்கு புறப்பட்டு வந்து, சசியை பிடித்து நடுரோட்டில் வைத்து நையப்புடைத்துள்ளனர்.
அப்போது, கூட்டத்தில் வந்த பெண் ஒருவர், சொல்லொண்ணா ஆத்திரத்துடன், அடிவாங்கி ரத்து காயங்களுடன் தரையில் கிடந்த சசியை, மிதி,மிதியென்று மிதித்து துவைக்கும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
போலீசாரின் விசாரணையில் வடிவுக்கரசியின் தங்கை என தெரியவந்துள்ளது.
திடீரென ஒரு கும்பல் திரண்டு வந்து ஒருவரைத் தாக்குவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தவறான சேர்க்கையால் தாக்குதலுக்கு உள்ளாகி காயம்பட்டு கிடந்த சசியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Comments