பள்ளி செல்லாமல் வீட்டுக்கு வந்த மாணவனை கண்டித்த பெற்றோர்.. விபரீத முடிவு எடுத்த மாணவன்..!

சேலம் மாவட்டம் கருமந்துறையில், பள்ளிக்கு செல்லாமல் விடுதியில் இருந்து வீடு திரும்பிய மகனை பெற்றோர் கண்டித்ததால், தற்கொலைக்கு முயன்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆத்தூரில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த அழகேசன், நேற்று தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
பள்ளி செல்லாமல் வீட்டிற்கு வந்த மாணவரை, பெற்றோர்கள் கண்டித்த நிலையில், வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை அழகேசன் குடித்ததாக கூறப்படுகிறது. மயங்கிய நிலையில் இருந்தவரை, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மாணவர் இன்று உயிரிழந்தார்.
Comments