'ஆவின் பொருட்களின் விற்பனை, கடந்த ஆட்சியை விட, தற்போது பன்மடங்கு அதிகரிப்பு' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

ஆவினில் பால் பொருட்களின் விற்பனை, கடந்த ஆட்சியை விட, தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், ஆவினில் பல பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் அமைச்சர் சா.மு. நாசரின் இல்லத்திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்றார்.
அதில் பேசிய அவர், இந்தியாவில் தமிழ்நாடுதான் முதலிடம் என ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டிருப்பதாகவும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், வெற்றி நிச்சயம் என்பதை, இது எடுத்துக்காட்டுவதாகவும் கூறினார்.
Comments