பக்கத்து வீட்டு பிரச்சனைக்கு புது பைக்கை எரித்த கணவன் மனைவி உள்ளிட்ட நான்கு பேர் கைது..!

0 1267

சென்னை அமைந்தகரையில் முன்விரோதத்தில் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக, கணவன்-மனைவி உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

எம்.எச் காலனியில் கடந்த 10ம் தேதி நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஏசி மெக்கானிக் விஜய்யின் இருசக்கர வாகனம் எரிக்கப்பட்டது தொடர்பாக அமைந்தகரை போலீஸார், சிசிடிவி காட்சி மூலமாக விசாரணை நடத்தினர்.

இதில், விஜயின் பக்கத்து வீட்டுக்காரர் சரவணன் நடத்தி வரும் ஆண்கள் விடுதிக்கு, விஜய் தரப்பினர் தொடர்ந்து இடையூறு அளித்து வந்ததால், சரவணன், அவரது மனைவி அனு ஆகியோர் தங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான பாடியைச் சேர்ந்த அலெக்ஸ், அவரது சகோதரர் ஸ்டீபன் ஆகியோரை அடியாளாக அனுப்பி பைக்கை எரித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments