டிச.24ல் ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்பார் என அறிவிப்பு..!
நாடாளுமன்றத்தேர்தலுக்கு தயாராகும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேர்தல் முன்னேற்பாடுகள், பூத் கமிட்டிகள் உள்ளிட்டவை தொடர்பாக, விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் பேட்டியளித்த கமல்ஹாசன், ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இதனிடையே, வரும் 24ஆம் தேதியன்று டெல்லியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்பார் என ம.நீ.ம.துணைத் தலைவர் மௌரியா தெரிவித்தார்.
Comments