பயணிகளை அச்சுறுத்தும் வகையில் தனியார் பேருந்து அதிவேக பயணம்..!

கள்ளக்குறிச்சி அருகே பயணிகளை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பேருந்தை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநரிடம், கல்லூரி மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
சேலம் நோக்கிச் சென்ற அந்த தனியார் பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் ஓட்டுநர் பேருந்தை அதிவேகமாக இயக்கியதால் பயணிகள் அச்சமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர், டைமிங் பிரச்னை காரணமாக வேகமாக ஓட்டியதாக ஓட்டுநர் பதிலளித்ததை வீடியோ எடுத்து சமூக வளைதலங்களில் பகிர்ந்துள்ளார்.
Comments