கிழக்கு கடற்பகுதியில் ஏவுகணையை ஏவிய வடகொரியா.. ஜப்பான்-கொரிய தீபகற்ப கடல் எல்லையில் ஏவுகணை விழுந்ததாக தகவல்..!

0 979

வடகொரியா, தனது கிழக்கு கடற்கரையோர கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக, ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலையில் ஏவுகணையை வடகொரியா ஏவியதாக தென்கொரிய கூட்டுப்படைத்தலைவர் தெரிவித்த நிலையில், அதனை ஜப்பான் பிரதமர் அலுலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

வடகொரியா, அதன் புதிய ஆயுதத்திற்கான அதிக சக்தியுடைய திட - திரவ மோட்டாரை சோதித்ததாக கூறிய சில தினங்களில், ஏவுகணையை ஏவியுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான ஏவுகணை ஏவப்பட்டதையடுத்து, உஷார் நிலையில் இருக்க ஜப்பான் பிரதமர் Fumio Kishida அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments