பல்கேரியாவில் கிறிஸ்துமஸை முன்னிட்டு சாண்டா கிளாஸ் வேடமணிந்து இருசக்கர வாகனத்தில் பயணம்..!

0 833

பல்கேரியாவில் கிறிஸ்துமஸை முன்னிட்டு சாண்டா கிளாஸ் வேடமணிந்தவர்கள் இருசக்கர வாகனங்களில் சென்றனர்.

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், கிறிஸ்துமஸ் உற்சாகத்தை கொண்டுவரவும் தலைநகர் சோபியாவில் 8-வது ஆண்டாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்.

பரிசுப்பொருட்களுடன் சென்ற அவர்கள், பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக வழிப்போக்கர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின்போது அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்காக நன்கொடையும் சேகரிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments