தென் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு இதே வலுவில் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தென் தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Comments