வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பைக் தீ வைத்து எரித்த 3 பேர் கைது..!

சென்னையில், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை கொளுத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அமைந்தகரை எம் எச் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ், காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் விஜய்க்கு அண்மையில் வாங்கி கொடுத்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் நள்ளிரவில் வந்து தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.
இதனை அணைத்த ஆனந்தராஜின் மகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆட்டோவில் வந்த 3 பேரையும் கைது செய்தனர்.
ஆனந்த ராஜின் வீட்டின் அருகே வஞ்சிக்கும் சரவணன் முன்பகை காரணமாக கூட்டாளிகளுடன் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
Comments