முன்பகை காரணமாக அரிவாள், பீர் பாட்டில்களுடன் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய இளைஞர்கள்..!

சென்னை, கே.கே.நகரில் முன்பகை காரணமாக அரிவாள், பீர் பாட்டில்களுடன் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிவலிங்கபுரத்தில் வசித்து வரும் இளைஞர்களுக்கும் அருகே உள்ள புதூரில் வசித்து வரும் இளைஞர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகளில் ஏற்கனவே முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவரின் வீட்டில் புதூரைச் சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கத்தி, பீர்பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலில் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த 5பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments