அடையாற்றில் குளித்த 14வயது பள்ளி மாணவன் மாயம்.. டிரோன் கேமரா உதவியுடன் மாணவனை தேடும் பணி தீவிரம்..!

0 1145

சென்னை சைதாப்பேட்டை அருகே அடையற்றில் மாயமான சிறுவனை நள்ளிரவிலும் டிரோன் கேமரா உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

திடீர் நகரைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் சாமுவேல் தனது நண்பர்கள் உடன் நேற்று மாலை 5 மணியளவில் அடையார் கூவம் ஆற்றில் குளிக்கும் போது மாயமானார்.

இதனையடுத்து அந்த மாணவரை தேடும் பணியில்  20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ரப்பர் படகு மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கு உதவிடும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் செந்தில் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.

அந்த குழுவினர் ஸ்பாட்லைட் கொண்ட டிரோன் கேமரா மற்றும் தெர்மல் கேமரா கொண்ட டிரோன்கள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments