உள்ளூர் கால்பந்து போட்டியில் கோல் கீப்பரை மைதானத்திற்குள் நுழைந்து தாக்கிய ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியாவில், மெல்போர்ன் விக்டரி அணிக்கும், மெல்போர்ன் சிட்டி அணிக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டியின் போது, ரசிகர்கள் கோல் கீப்பரை தாக்கியதால் ஆட்டம் கைவிடப்பட்டது.
ஆஸ்திரேலிய ஏ லீக் போட்டியில், கிராண்ட் ஃபைனல்ஸ் தொடரை, அடுத்த 3 ஆண்டுகளுக்கு சிட்னிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டதை கண்டித்து ரசிகர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
இதனையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், மைதானத்திற்குள் நுழைந்த விக்டரி அணி ரசிகர்கள், சிட்னி அணி கோல் கீப்பரை சூழ்ந்து கொண்டு தாக்கினர்.
Comments