டெக்ஸாஸில் பராமரிக்கப்பட்டும் 45 வயதான ஆண் ஒராங்குட்டான் வட அமெரிக்காவில் மிக வயதானது என அறிவிப்பு..!
அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ஆண் ஒராங்குட்டான், தற்போது வட அமெரிக்காவில் உள்ள மிக வயதான ஆண் ஒராங்குட்டானாக பார்க்கப்படுகிறது.
ரூடி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஒராங்குட்டான் 1978-ம் ஆண்டு முதல் ஹூஸ்டன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்துடன் 45 வயது நிறைவடைந்தாலும், 50 வயதான பெண் ஒராங்குட்டானும் உயிர் வாழ்ந்து வருகிறது.
பெண் ஒராங்குட்டான்கள் ஆண் ஒராங்குட்டான்களை விட அதிக காலம் உயிர் வாழ்வதாகவும், ஒரு வயதான ஒராங்குட்டான் 8 முதல் 10 ஆண்களில் பலத்திற்கு சமம் என்றும் கூறப்படுகிறது.
Comments