சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீ.. சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து சேதம்!

0 850

சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயால் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

காட்டுத் தீ பரவல் காரணமாக பல்வேறு பகுதிகளில், மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வால்பரைசோ பிராந்தியத்தில் பல வீடுகள் எரிந்து சேதமடைந்த நிலையில், சாண்டியாகோ நகரிலும் அதனருகில் உள்ள குராகாவியிலும் புகை சூழ்ந்துள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை சாண்டியாகோவில் 36.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது கடந்த 111 ஆண்டுகளில் நகரம் கண்ட மூன்றாவது மிக உயர்ந்த வெப்பநிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments