துணை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது..!

0 42029

யூ-டியூபர் சூர்யா தேவியை தாக்கிய வழக்கில், சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2020-ம் ஆண்டு, நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து அவதூறு பரப்பியதாக சூர்யா தேவிக்கும், வனிதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வனிதாவிற்கு ஆதரவாக சூர்யா தேவி குறித்து அவதூறாக பேசி நாஞ்சில் விஜயன், யூடியூபில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கேட்கச் சென்றபோது, தன்னையும், தனது நண்பரையும் நாஞ்சில் விஜயன் தாக்கியதாகவும், சூர்யா தேவி தன்னை தாக்கியதாக நாஞ்சில் விஜயனும், போலீசாரிடம் பரஸ்பரம் புகாரளித்தனர்.

விசாரணையில், சூர்யாதேவி உள்பட இருவரை தாக்கிவிட்டு, வழக்கிலிருந்து தப்ப நாஞ்சில் விஜயன் மருத்துவமனை சென்றது தெரிய வந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments