டிச.20ம் தேதி தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 20ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 20ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
வரும் 21ம் தேதி புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Comments