ஆந்திராவிலிருந்து நகை வாங்க சென்னை வந்தவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி ரூ.68 லட்சம் அபகரிப்பு.?

ஆந்திராவில் இருந்து சென்னை சௌகார்பேட்டைக்கு நகை வாங்க வந்தவர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் என்று கூறி 68 லட்சம் ரூபாயை அபகரித்த நான்கு பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
குண்டூரில் நகைக்கடை நடத்திவரும் விஸ்வாதன், கடையில் பணிபுரியும் அலிகான், சுபானி ஆகியோரிடம் நகை வாங்க பணத்தை கொடுத்து சென்னைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை காலை மாதவரம் வந்தடைந்த அவர்கள், கொடுங்கையூரில் உள்ள நண்பரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, மாருதி டெம்போ காரில் வந்து வழிமறித்த நான்கு பேர், (தாங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் எனக்கூறி) அலிகானை மட்டும் காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.
அலிகானிடமிருந்து பணத்தை பறித்துவிட்டு மாதவரம் - மணலி சாலையில் இறக்கிவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து, விஸ்வாதன் அளித்த புகாரின்பேரின், கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Comments